ஜூலை 13 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 13, 2015, 05:16 PM

Subscribe

இன்றைய (13-07-2015) லண்டன் பிபிசி தமிழோசையில்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதிநாளான இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குருநாகலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்திருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப்பிரதேசங்களில் வேட்புமனு தாக்கலின் இறுதி நிலவரம் குறித்த செய்திகள்

இந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக முன்பு அறிவித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தற்போது போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்திருப்பது குறித்த செய்தி;

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைதான ஒன்பது பேரின் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறித்த செய்தி;

அந்நியச் செலாவணிக் குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அவருக்கு 10 லட்சரூபாய் அபராதமும் விதித்திருப்பது குறித்த செய்தி;

கிரேக்கத்துக்கான இன்னொரு கடன்மீட்புத் திட்டத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணங்கியிருப்பது குறித்த செய்திகள்;

பாகிஸ்தானின் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள கில்கித் பல்திஸ்தானில்தான் பாகிஸ்தானிலேயே அதிகமான பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் இடமாக இருப்பதற்கான காரணங்களை விளக்கும் பிபிசி செய்தி;

நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.