ஜூலை 15 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (15-07-2015) பிபிசி தமிழோசையில்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அனுமதியின்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுவின் கூட்டம் நடத்துவதைத் தடைசெய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்த செய்தி;
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகள் குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி;
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த போட்டியிடும் குருநாகலில் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து சிவாஜிலிங்கத்தின் செவ்வி;
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இணைந்து ஜனநாயகப் போராளிகள் கட்சி என்கிற புதிய கட்சி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிடுவது சரியா என்பது குறித்து இலங்கை வடபகுதி பொதுமக்களின் கருத்துக்கள்;
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு மறுத்துவிட்டது குறித்த செய்தி;
கிரிக்கெட் உலகில் கூடுதல் ஆளுமை செலுத்தி வரும் மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் Champions League T 20 போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது குறித்த செய்தி;
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிவரும் பின்னணியில் 11 நாட்களுக்குப் பிறகு புதன்கிழமை அவர் தலைமைச் செயலகம் வந்தது குறித்த செய்தி;
நேற்று மறைந்து இன்று தகனம் செய்யப்பட்ட தமிழ்த் திரைப்பட இசையுலகின் மெல்லிசை மன்னன் என்று போற்றப்பட்ட எம் எஸ் விஸ்வநாதன் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் இருந்து ஒரு ஒலிக்கீற்று ஆகியவற்றைக் கேட்கலாம்.
