ஜூலை 17, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (17-07-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கையில் அனுராதபுரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதல் பொதுக்கூட்டத்தில் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றியிருப்பது குறித்த செய்தி;
இலங்கையில் இஸ்லாமியர்களின் மத நிகழ்வுகளில் தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்று வருவது கவலையளிப்பதாக கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது குறித்த செய்தி;
சன் குழுமத்திற்கு பண்பலை வானொலிகளை ஏலத்தில் எடுப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டிருப்பது குறித்த செய்தி;
அமெரிக்காவில் நான்கு மரைன் வீர்ர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துப்பாக்கிதாரிக்கு சர்வதேச தீவிரவாதத்துடன் தொடர்பில்லையென புலனாய்வு அதிகாரிகள் கூறியிருப்பது குறித்த செய்தி உள்ளிட்ட தகவல்கள் இன்றைய தமிழோசையில் இடம்பெற்றிருக்கின்றன.
