ஜூலை 20, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (20-07-2015) லண்டன் பிபிசி தமிழோசையில்
இரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான அண்மைய சர்வதேச ஒப்பந்தத்தை ஏற்கும் ஒரு தீர்மானத்தின் மீது ஐநா பாதுகாப்பு சபை வாக்களிப்பு நடத்தி ஏற்றுக்கொண்டிருப்பது குறித்த செய்தி;
இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்த செய்தி;
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைக்கக்கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் இலங்கை மனித உரிமை ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருப்பது குறித்த செய்தி;
இலங்கை மக்கள் தொகையில் 52 சதவீதம் இருக்கும் பெண்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையில் வெறும் 5 சதவீதம் மாத்திரம் இருப்பது குறித்து பெண் வாக்காளர்களின் கருத்துக்கள்;
இலங்கையின் வடக்கே வவுனியா புளியங்குளம் பகுதியில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்துத்தரக்கோரி நடத்திய கவனயீர்ப்புப் போராட்டம் குறித்த செய்திகள்;
இந்தியாவில் ஆண்களில் திருமணவயதை 18 ஆக குறைக்கும்படி மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது குறித்த செய்தி;
விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்
