ஜூலை 24, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (24-07-2015) பிபிசி தமிழோசையில்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிபிசிக்கு அளித்திருக்கும் பிரத்யேக பேட்டி;
இலங்கை இனமோதலின் அதி முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் கருப்பு ஜீலைக்கலவரங்களை நினைவு கூறும் நிகழ்வு குறித்த செவ்வி;
மலேரியாவுக்கான முதலாவது தடுப்பு மருந்து ஒழுங்குபடுத்துனர்களின் இறுதிக்கட்ட சோதனைகளில் ஒன்றில் தேறியுள்ளது குறித்த செய்தி;
கொழும்பு நகரில் 1983ஆம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக கலவரங்கள் நிகழ்த்தப்பட்ட கறுப்பு ஜூலை தினத்தை நினைவுகூறும் வகையில் கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டம் குறித்த செய்தி;
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது குறித்த செய்தி;
. தேர்தல்கள் என்பவை ஒரு சமூகத்தின் அனைத்து தரப்பின் பிரதிநிதிகளையும் தேர்வு செய்வதற்கான வழிமுறையாகப் பார்க்கப்படும் பின்னணியில், இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்து அரசியல் திறனாய்வாளர் நிலாந்தனின் ஆய்வுக்கண்ணோட்டம்;
இந்திய அளவில் மிகப்பெரிய வணிக வெற்றி பெற்றிருக்கும் பாகுபலி திரைப்படத்தில் அருந்ததியர்களின் ஒரு பிரிவினரை அவமதிக்கும் வசனங்கள் இருப்பதாக எதிர்ப்பது ஏன் என்பது குறித்து இந்த திரைப்படத்தை எதிர்க்கும் அமைப்புக்களில் ஒன்றான புரட்சிப்புலிகள் அமைப்பின் பொதுச்செயலாளர் திலீபனின் செவ்வி;
இந்த எதிர்ப்பு குறித்து பாகுபலி திரைப்படத்தின் வசனகர்த்தாவான மதன் கார்க்கியின் தன்னிலை விளக்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
