கூட்டமைப்பு கூறியுள்ளபடி இலங்கையின் வடக்கு-கிழக்கு இணைப்பு சாத்தியமா?
Share
Subscribe
இலங்கையின் இணைந்த வடகிழக்குப் பகுதியில் அதிகூடிய அதிகாரப் பகிர்வு என்று கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டது செல்லாது என நாட்டின் அதியுயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், கூட்டமைப்பினர் இணைந்த வடக்கு கிழக்கு பற்றி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது கேள்விகளை எழுப்பியுள்ளது. வடக்கு கிழக்கு இணைப்பு என்று உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட ஐந்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ள நிலையில், அந்தத் தீர்ப்பை மாற்றாமலோ அல்லது நாடாளுமன்றத்தில் வேறு சட்டவழிமுறைகள் கொண்டுவராமலோ இரு மாகாணங்களையும் மீண்டும் இணைப்பது சாத்தியப்படாத விஷயம் என இலங்கை அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் யுவி தங்கராஜா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இந்த இணைப்பு குறித்து இரண்டு மாகாண சபைகளும் இதுவரை எந்தவொரு பிரேரணையும் கொண்டுவந்து தீர்மானங்களை நிறைவேற்றவில்லை என்றும் அவர் கூறுகிறார். இணைப்புக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேசினாலும், கிழக்குவாழ் முஸ்லிம் மக்களிடையே அதற்கான ஆதரவு இருக்காது என்றும், முஸ்லிம் தலைவர்கள் அதை எதிர்த்தே வந்துள்ளனர் என்றும் டாக்டர் தங்கராஜா கூறுகிறார். கூட்டமைப்பினர் இணைப்பு குறித்து பேசுவது சிங்கள மக்களிடம் சந்தேகங்களை ஏற்படுத்தி சிங்கள அரசியல் தலைவர்கள் மத்தியில் ஆதரவில்லாத சூழலையே உருவாக்கும் எனவும் அவர் தெரிவிக்கிறார். டாக்டர் யுவி தங்கராஜாவின் கருத்துக்களை இங்கே கேட்லகாம்.
