ஜூலை 27, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 27, 2015, 05:28 PM

Subscribe

இன்றைய (27-07-2015) தமிழோசையில்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இன்று மாலை மாரடைப்பால் காலமானது குறித்த செய்தி;

இஸ்லாமிய அரசு குழுவினர் மீதான தாக்குதல் என்கிற பெயரில் குர்து பிரிவினைவாதக்குழுவினருக்கு எதிராக துருக்கி தாக்குதல் நடத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;

சீனா தய்வான் இடையிலான அரசியல் உறவு ஸ்திரமாக இல்லை என தய்வானின் அதிபர் மா யிங் ஜோ, பிபிசியின் சீனச் செய்திகள் ஆசிரியர் கேர்ரி கிரேஸிக்கு வழங்கிய பிரத்யேக பேட்டி;

சர்வதேச நாடுகளுடன் இரான் செய்துகொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தையடுத்து இரான் மீதான தண்டனைத் தடைகளை மேற்குலகம் தளர்த்தினால் உருவாகும் தொழில் வாய்ப்புகளின் ஒருபகுதியாக இரானில் வாகன உற்பத்தியை மேம்படுத்த முனையும் முன்னெடுப்புகள் குறித்த ஒரு செய்தித்தொகுப்பு;

இலங்கையின் வடக்கே காணாமல் போன 3 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது குறித்த செய்தி;

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் குறித்து யாழ்ப்பாண இளைய வாக்காளர்கள் மனநிலையை பிரதிபலிக்கும் அவர்களின் குரல்கள்;

நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.