ஜூலை 30 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
மும்பை குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட யாக்கூப் மேமனின் மரண தண்டனை நிறைவேற்றம் குறித்து அவரது வழக்கறிஞர்கள் குழுவினரின் கருத்து.
காலஞ்சென்ற அப்துல் கலாமுக்கு எப்படி நாடு தழுவிய ஒரு ஆளுமை ஏற்பட்டது என்பது தொடர்பில் ஒரு பார்வை.
இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ரீயூனின் தீவில் கரையொதுங்கியுள்ள விமானப் பகுதிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காணாமல் போன மலேசிய விமானத்தின் பகுதிகளா என்று நடைபெற்று வரும் ஆய்வுத் தகவல்கள்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்னும் முஸ்லிம் கட்சிகள் வெளியிடாமல் இருப்பது குறித்த ஒரு அலசல்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டி கொள்கைக்கு பிரதான தேசியக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளவை.
அமெரிக்காவில் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதான செய்திகள்
