அப்துல் கலாமின் ஆளுமைக்கு என்ன காரணம்?
Share
Subscribe
இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மறைவு, அவர் காலமான தினம் முதல் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின்னரும் உள்நாட்டிலும், இலங்கை போன்ற நாடுகளிலும் பெரிய அளவில் பேசப்படுகிறது.
அவரது மறைவு இந்தியா முழுவதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் அவரது மறைவு குறித்து இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.
கடந்த பல ஆண்டுகளில் இந்தியாவில் காலமான ஒரு தலைவருக்கு இந்த அளவுக்கு மக்கள் ஆதரவு இருக்கவில்லை என்று உள்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் அப்துல் கலாமுக்கு அப்படியான ஒரு பிம்பம் மற்றும் ஆதரவு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசினார் பல ஆண்டுகளாக 'பிராண்ட் மானேஜ்மெண்ட்' எனப்படும் துறையில் ஈடுபட்டு வரும் வேல்முருகன்.
அவரது எளிமையான தோற்றம், வாழ்க்கை முறை, ஆண்டான் அடிமை எனும் மனப்பான்மை இல்லாத குணம் போன்றவையே அவர் மீது மக்களுக்கு பெரிய மரியாதையை ஏற்படுத்தியது என்கிறார் அவர்.
இன்றைய சூழலில் அவரால் மக்களிடம் ஒரு நம்பிக்கையை விதைக்க முடிந்தது, அதுவே அவரது ஆளுமை என்கிறார் வேல் முருகன்.
அவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை இங்கே கேட்கலாம்.
