ஆக்ஸ்ட் 3, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 03, 2015, 04:56 PM

Subscribe

இன்றைய (03-08-2015) பிபிசி தமிழோசையில்

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு கோரி மாணவர்கள் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் கடும் மோதல்கள் நடந்திருப்பது குறித்த செய்திகள்;

இந்திய அரசு 800 க்கும் அதிகமான ஆபாச இணையதளங்களுக்குத் தடை விதித்திருப்பது குறித்த செய்தி;

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியிலுள்ள பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது விடுதலைப்புலிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலின் 25வது ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்படுவது குறித்த செய்தி;

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் சுயேச்சைக்குழுவின் சார்பில் போட்டியிடுவது குறித்த அவரது செவ்வி;

சீனாவில் உள்ள மதுபானத் தயாரிப்பளர்களில் சிலர் தமது மதுபானங்களில் வயாகராவைக்கலந்து விற்பனை செய்தது பெரும் சர்ச்சையாக வெடித்திருப்பது குறித்த செய்தி;

விளையாட்டரங்கத்தில் சர்வதேச தடகள விளையாட்டுக்களில் ஊக்கமருந்து பயன்படுத்தியவர்கள் மீது சர்வதேச தடகள சம்மேளனம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்த ஆய்வுக்கண்ணோட்டம் ஆகியவற்றைக் கேட்கலாம்.