ஆகஸ்ட் 7 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 07, 2015, 07:27 PM

Subscribe

இன்றைய (07-08-2015) பிபிசி தமிழோசையில்

வங்கதேசத்தில் மதச்சார்பற்ற கருத்துக்களைத் தெரிவித்துவந்த வலைபதிவரான நிலோய் நீல் என்பவர் தலைநகர் டாக்காவில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டிருப்பது குறித்த செய்தி;

இலங்கை ரக்பி விளையாட்டு வீரர் வாசிம் தாஜுதீனின் மரணம் தொடர்பாக தம் குடும்பம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளது குறித்த் செய்தி;

இலங்கைத் தேர்தலை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவருக்கும் இடையிலான மோதல் பகிரங்க அறிக்கைப் போராக மீண்டும் வெடித்திருப்பது குறித்த செய்தி; கட்சித் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் அனுமதியின்றி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டங்களை கூட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று நீட்டித்துள்ளது குறித்த செய்தி;

தமிழகம் வந்திருக்கும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியிருப்பது குறித்த செய்தி;

மதுரையில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில், ஏழு பட்டியலின ஜாதியைச் சேர்ந்த மக்களை இணைத்து தேவேந்திர குல வேளாளர்கள் என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டுமென தேவேந்திர தன்னார்வலர் அறக்கட்டளை என்ற அமைப்பு கோரியுள்ளது குறித்து அந்த அமைப்பின் தலைவர் தங்கராஜின் செவ்வி;

தமிழ்நாட்டில் கல்விக் கடன் பெற்ற மாணவியின் குடும்பத்தினரை துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட பொதுத்துறை வங்கியின் செயல் மனித உரிமை மீறல் என்று தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறித்த செய்தி;

ஐராப்பவை நோக்கி வரும் அகதிகள் கிரேக்கத்தில் சந்திக்கும் பிரச்சனை பெரும் குழப்பகரமானதாகவும் தாங்கொணா வேதனையாகவும் இருப்பதாக ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. அதே ஐரோப்பாவில் இருக்கும் ஹங்கேரிக்குள் தினமும் 1500 பேர் என்ற அளவில் வந்துகுவியும் குடியேறிகளை தமது நாட்டுக்குள் வரவிடாமல் எல்லையிலேயே தடுப்பதற்காக ஹங்கேரி இரும்பு வேலி அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது தொடர்பான தகவல்கள் ஆகியவற்றைக் கேட்கலாம்.