இன்றைய தமிழோசையில் - 08 ஆகஸ்டு 2015

Aug 08, 2015, 04:30 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில்

*இலங்கையில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அங்கு தேர்தல் தொடர்பான வன்முறை நிகழலாம் என அமெரிக்கா தன் குடிமக்களுக்குக் கூறியிருப்பது குறித்த செய்தி..

*இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மூன்று இன மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒரு பெட்டகம்..

*சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் குழுவின் கட்டுப்பாட்டின் உள்ள பகுதியில் தமது பிள்ளைகளை கொண்டு செல்ல முயற்சித்ததாக கூறப்படும் இரு குடும்பங்களின் வயதுவந்த உறுப்பினர்களுக்கு மின்னணு கண்காணிப்பு பட்டிகளை அணிவிக்குமாறு பிரிட்டிஷ் நீதிமன்றம் கூறியிருப்பது குறித்த செய்தி,

*ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கட் தொடரை இங்கிலாந்து வெற்றிபெற்றிருப்பது குறித்த செய்தி..

ஆகியவற்றை கேட்கலாம்.