ஆகஸ்ட் 10 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (10-08-2015) பிபிசி தமிழோசையில்
நடக்கவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இனப்பிரச்சனைக்கு தீர்வு முன்வைக்காவிட்டால் இலங்கையில் மீண்டும் இன வன்முறை வெடிக்கும் அபாயம் இருப்பதாக சம்பந்தர் எச்சரித்திருப்பது குறித்த செய்தி;
இலங்கையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் சடலம் இன்று திங்கட்கிழமை விசாரணைக்காக தோண்டியெடுக்கப்பட்டது குறித்த செய்தி;
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளருமான நாமல் ராஜபக்சவை நிதி மோசடி விசாரணை பொலிஸ் பிரிவில் ஆஜராகும்படி அழைக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி;
இலங்கையில் மலையகத் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நாட்களுக்கு தோட்ட நிர்வாகம் சம்பளம் மறுத்திருப்பது தொழிலாளர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறித்த செய்தி;
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வடபகுதியின் ஆண்துணையின்றி குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்த தேர்தல் தொடர்பான சிறப்புப் பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
