ஆகஸ்ட் 12, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 12, 2015, 05:25 PM

Subscribe

இன்றைய (12-08-2015) தமிழோசையில்

இலங்கையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆறு மாதங்கள் முடிந்த நிலையில் பிரிவினைவாத அரசியல் சிக்கல்கள் மீண்டும் இலங்கையில் உருவெடுத்திருப்பதாக இன்டர்நேஷனல் க்ரைசிஸ் க்ரூப் என்ற ஆய்வு நிறுவனம் எச்சரித்திருப்பது குறித்த செய்தி;

இலங்கை நாடாளுமன்றத்தேர்தல் குறித்த சிறப்புப் பெட்டகத்தொடர் வரிசையில் போர் காரணமாக இலங்கைக்குள் இடம்பெயர்ந்து வாழ்பவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்த சிறப்புப் பெட்டகம்;

பிரான்ஸ் நபட்டு பெண் சுற்றுலா பயணிக்கு தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பாசிக்குடா கடல் சுற்றுலா பிரதேசத்தில் இராணுவதைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தி;

தமிழ்நாட்டில் மாநிலத் தலைமைத் தகவல் ஆணையராக தமிழக காவல்துறையின் முன்னாள் தலைவர் ராமானுஜம் சமீபத்தில் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மாநில தகவல் ஆணையம் முன்பாக, ஜால்ரா அடிக்கும் போராட்டத்தை நடத்திய சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ. இளங்கோவின் செவ்வி;

சீனா தனது நாணயமான யுவானை இரண்டாவது நாளாக மதிப்பிறக்கம் செய்துள்ளது ஏன் என்பது குறித்தும், இது இந்தியாவை எப்படி பாதிக்கும் என்பது குறித்தும் இந்திய அரசின் ஓய்வு பெற்ற நிதித்துறை அதிகாரியும், தொடர்ச்சியாக சர்வதேச நிதி நிலைமைகள் குறித்து எழுதி வருபவரான கே. சுப்ரமணியத்தின் ஆய்வுக் கண்ணோட்டம் ஆகியவற்றைக் கேட்கலாம்.