ஆகஸ்ட் 14, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (14-08-2015) பிபிசி தமிழோசையில் இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேற்றைய கடிதத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதில் அளித்திருப்பது குறித்த செய்தி;
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் ஆகியோர் அந்த பதவியில் செயற்படுவதை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடைசெய்திருப்பது குறித்த தகவல்;
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மலையகப் பகுதியில் இருக்கும் தமிழர்கள் இந்தத் தேர்தல் குறித்து என்ன நினைக்கிறார்கள், அவர்களுடைய அபிலாஷைகள் என்ன என்பது குறித்து ஒரு பெட்டகம்;
சென்னைப் பல்கலைக் கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவராக இருநத பேராசிரியர் ராமுமணிவண்ணன் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்து ஒரு செவ்வி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
