ஆகஸ்ட் 17, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (17-08-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கை நாடாளுமன்றத்த் தேர்தல் பெருமளவு அமைதியாக நடந்து முடிந்திருப்பது குறித் செய்திகள், இதுகுறித்து தேர்தல் ஆணையரின் கருத்துக்கள்;
இன்றைய தேர்தலில் வாக்களித்த வடக்கு, கிழக்கு மற்றும் மலையக வாக்காளர்கள் சிலரின் கருத்துக்கள்;
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் சிலரை கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன நீக்கியிருப்பது குறித்து சிலோன் டுடே பத்திரிகையின் மூத்த செய்தியாசிரியர் ஆன்ந்த் பாலகிட்ணரின் ஆய்வுக்கண்ணோட்டம்;
இந்தியாவில் மாநில முதல்வர்களின் புகைப்படங்களைக் கொண்ட அரசாங்க விளம்பரங்கள் வெளியிடப்படுவதைத் தடுப்பது தொடர்பாக, மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறித்த செய்தி;
விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
