ஆகஸ்ட் 19, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (19-08-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, புதிய அரசாங்கத்தில் பங்கெடுக்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது குறித்த செய்தி;
தமது அரசாங்கத்தில் அனைத்துக் கட்சிகளும் இணையவேண்டும் என்று ரனில் விடுத்திருக்கும் அழைப்பை ஏற்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்த புதிய ஆட்சியில் சேரவேண்டுமா வேண்டாமா என்பது குறித்து இலங்கையின் வடகிழக்குப் பகுதி மக்களின் கருத்துக்கள்;
ரனில் தலைமையிலான புதிய அரசு சந்திக்கும் சவால்கள் என்ன என்பது குறித்து சிலோன் டுடே பத்திரிகையின் மூத்த செய்தியாசிரியர் ஆன்ந்த் பாலகிட்ணர் வழங்கும் ஆய்வுக் கண்ணோட்டம்;
இந்த தேர்தலில் தோற்ற மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலம் என்ன என்பது குறித்து இலங்கை அரசியல் திறனாய்வாளர் கீத பொன்கலனின்ம் ஆய்வுக்கண்ணோட்டம்;
இந்தத் தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கட்சியின் எதிர்காலத் திட்டடம் குறித்து தெரிவித்திருக்கும் கருத்துக்கள்;
இதேவேளை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆறாவது முறையாக இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து அரசியல் திறனாய்வாளர் நடராஜ குருபரனின் ஆய்வுக்கண்ணோட்டம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
