ஆகஸ்ட் 26 2015, பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (26-08-2015) பிபிசி தமிழோசையில்
அமெரிக்காவில் செய்தியாளர்கள் இருவர் நேரலை ஒளிபரப்பின்போது சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையில் நடந்த பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து வலுவான உள்ளக விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுவதை அமெரிக்கா ஆதரிக்கும் என அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா பிஷ்வால் தெரிவித்திருப்பது குறித்த தகவல்கள்;
அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கருத்துக்கள்;
நிஷா பிஸ்வாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் இன்று சந்தித்துப் பேசியது தொடர்பான செய்தி;
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த மனிதப் புதைகுழி என்று சந்தேகிக்கப்படும் இடத்திற்கு அருகில் கிணறு ஒன்று இருந்ததாகத் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி;
திருகோணமலையில் மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்த செய்தி;
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நியமனங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி;
மதுரையிலுள்ள விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் விடுத்த கோரிக்கைக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரி குஜராத்தில் ஒரு சமூகத்தினர் நடத்திய போராட்ட வன்முறைகள் காரணமாக அங்கே இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.
