ஆகஸ்ட் 31, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (31-08-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணை தேவை என்று தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தமிழரசு தவிர்த்த கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இதில் தமிழரசு கட்சியின் நிலை என்ன என்பது குறித்த சம்பந்தரின் செவ்வி;
இலங்கையில் காணாமல்போனவர்களின் பிரச்சனை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் இலங்கையர்கள் மத்தியில் கவிதைப் போட்டி ஒன்றை நடத்தவுள்ளதாக அம்னஸ்டி இண்டர்நேஷனல் என்ற மனித உரிமை அமைப்பு அறிவித்துள்ளது குறித்து இந்தக் கவிதைப் போட்டியின் நடுவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான, தற்போது கனடாவில் வாழ்ந்துவரும் இலங்கைக் கவிஞர் சேரனின் செவ்வி;
இலங்கையின் வடகிழக்குப் பிரதேசத்தில் இருந்து செல்லும் இரண்டு பெண் உறுப்பினர்களில் ஒருவரான சாந்தி சிறிஸ்கந்தராசாவிடம் அவரது அரசியல் பிரவேசம் குறித்தும், நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்துமான பிரத்யேக செவ்வி;
விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான கே.பி. என்கின்ற குமரன் பத்மநாதன் தொடர்பில் இதுவரை நடந்துள்ள விசாரணைகளின்படி, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு தேவையான எந்த விதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று இலங்கையின் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது குறித்த செய்தி;
இந்தியாவில் மரண தண்டை ஒழிக்கப்பட வேண்டும் என்று, நீதிபதி ஏ பி ஷா தலைமையிலான தேசிய சட்ட ஆணையம் இன்று மத்திய அரசிடம் அளித்துள்ள அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது குறித்த செய்தி;
நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
