மத்தல ராஜபக்ஷ விமான நிலையம்:தொடரும் சர்ச்சைகள்

Sep 02, 2015, 04:58 PM

Subscribe

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் என்று கூறப்பட்டு மிகவும் ஆடம்பரமான வகையில் தொடங்கப்பட்ட மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்தின் ஒரு பகுதியை நெற்களஞ்சியமாக மாற்றுவதாக அரசு அறிவித்துள்ளது. அந்த விமான நிலையம் திறக்கப்பட்டது முதல் அங்கு எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாகவே விமான சேவை இருந்துள்ளது. ஆனால் இந்த விமான நிலையம் மத்தல பகுதியில் அமைக்கப்பட்டது முதலே சர்ச்சையில் சிக்கியிருந்தது. உலகளவில் இதுவரை எங்கும் ஒரு விமான நிலையத்தின் பகுதியொன்று நெற்களஞ்சியமாக மாற்றப்பட்டது இல்லை என்று கூறப்படுகிறது. தற்போது அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் டாக்டர் எம் கணேசமூர்த்தி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்.