செப்டம்பர் 9, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 09, 2015, 04:23 PM

Subscribe

இன்றைய (09-09-2015) பிபிசி தமிழோசையில்

தமிழக அரசு முன்னெடுத்து இன்று துவங்கியிருக்கும் இரண்டு நாள் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு உரிய பலன் தருமா என்பது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையின் தலைவர் டாக்டர். ஜோதி சிவஞானத்தின் ஆய்வுச் செவ்வி;

இஸ்லாமிய அரசு என்று தன்னைக் கூறிக்கொள்ளூம் ஐஎஸ் அமைப்பு இஸ்லாமிய மார்க்க விதிமுறைகளுக்கு மாறானது என்று இந்தியாவிலுள்ள சில இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் மத குருமார்கள் ஃபாத்வா எனப்படும் மத ஆணை ஒன்றை பிறப்பித்திருப்பது குறித்து மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாகிருல்லாவின் செவ்வி;

இலங்கையில் மட்டக்களப்பு சத்துருகொண்டான் படுகொலைச் சம்பவம் நடந்து இன்றுடன் 25 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை அதற்கான நீதி தமக்கு கிடைக்கவில்லை என்று உள்ளூர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளது குறித்த செய்திகள்;

யேமனில், சவுதி அரேபியாவின் போர் விமானங்களால் குண்டு வீசி தாக்கப்பட்ட இரண்டு படகுகளில் பயணம் செய்த 20 இந்தியர்களில் 7 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது குறித்த செய்தி;

சவூதி அரேபியத் தூதரக அதிகாரி ஒருவர், நேபாள நாட்டை சேர்ந்த பணிப் பெண்கள் இருவரை, திரும்பத் திரும்ப பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாக எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்திருப்பது குறித்த செய்தி; இலங்கையில் மட்டக்களப்பு சத்துருகொண்டான் படுகொலைச் சம்பவம் நடந்து இன்றுடன் 25 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை அதற்கான நீதி தமக்கு கிடைக்கவில்லை என்று உள்ளூர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளது குறித்த செய்திகள்;

ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து உருவாக்கிய தேசிய அரசாங்கம் எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்யும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்த செய்தி;

பிரிட்டன் வரலாற்றில் முடிசூடி நீண்ட காலம் ஆட்சி செய்தவர் என்ற பெருமையை இரண்டாம் எலிசபத் மகாராணியார் இன்று பெற்றிருப்பது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.