ஹோமோ நலெடி: '30 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய' நமது மூதாதையர்கள்
Share
Subscribe
நமது இன்றைய மனித குலத்தின் மூதாதையர்கள் பற்றி இதுவரை நமக்கிருந்துவந்த புரிதலை, விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பொன்று மாற்றப்போகின்றது.
தென்னாப்பிரிக்காவில் குகைப் பகுதி ஒன்றிலிருந்து கிடைத்திருக்கின்ற மனிதனை ஒத்த உயிரினம் ஒன்றின் சிதைந்த எலும்புக்கூடுகளின் எச்சங்கள் தான் இதற்கு காரணம்.
ஆப்பிரிக்காவில் இந்த ரகத்தில் இதுவரை நடந்திருக்கின்ற பெரிய கண்டுபிடிப்பு இதுதான்.
நலெடி என்று பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த உயிரினம், இன்றைய மனித இனம் இடம்பெற்றிருக்கின்ற ஹோமோ குடும்பத்திலேயே சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த நலெடிகள் எவ்வளவு காலத்துக்கு முன்னர் வாழ்ந்தனர் என்பதை ஆய்வாளர்களால் கண்டுபிடிக்க முடியாதுள்ள போதிலும், நமது மனித குலத்தின் மூதாதையர்கள் வரிசையில் மூத்தவர்களில் இவர்கள் இருந்திருக்கலாம். அதாவது ஆப்பிரிக்காவில் கிட்டத்தட்ட முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வரை இவர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் Lee Berger பிபிசியிடம் தெரிவித்தார்.
