தலித் தொழில் முனைவோர் எண்ணிக்கை: தமிழகத்தில்தான் அதிகம்

Sep 11, 2015, 02:17 PM

Subscribe

தமிழக அரசு , தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஊக்குவிக்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை கடந்த இரண்டு நாட்களாக நடத்தி முடித்த செய்தி குறித்து தமிழோசையில் கேட்டிருப்பீர்கள். இதனிடையே, தமிழ்நாட்டில் தான் சிறு மற்றும் மத்திய ரக தொழில் துறையில், தலித் தொழில் முனைவோரின் எண்ணிக்கை நாட்டிலேயே அதிகமாக இருக்கிறது என்று தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சம்மேளேனம் என்ற அமைப்பின் தலைவர் மிலிந்த் காம்ப்ளே கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 23,000 சிறு மற்றும் மத்திய ரக தொழில் நிறுவனங்கள் தலித் தொழில் முனைவோர்களால் நடத்தப்படுவதாக அரசு புள்ளிவிவரங்கள் காட்டுவதாக , இந்த அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் , சுரேஷ் பாபு பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

தலித் தொழில் முனைவோர்கள் வங்கிகள் , அரசு துறைகள் மற்றும் தனியார் தொழில் சங்கங்கள் ஆகியவற்றிடமிருந்து என்ன பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்பது குறித்து அவர் தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்.