மக்கா பெரிய பள்ளிவாசல் விபத்து: அதிகாரிகள் விசாரணை

Sep 12, 2015, 04:24 PM

Subscribe

மக்காவில் உள்ள பெரிய பள்ளிவாசல் மீது கிரேன் ஒன்று விழுந்து ஏற்பட்டுள்ள விபத்து தொடர்பில் சவுதி அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இஸ்லாமியர்களின் மிகவும் புனித தலத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். குறைந்தது 230 பேர் காயமடைந்துள்ளனர்.

திட்டமிட்டவாறு இந்தமாத இறுதியில் ஹஜ் யாத்திரை நடக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அந்தப் பகுதி விரிவாக்கப்பட்டுவரும் நிலையில், சவுதியின் கட்டுமான வேலைகளில் பாதுகாப்பு குறித்த கவலைகள் உள்ளதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.