இன்றைய ( செப்டம்பர் 15) பிபிசி தமிழோசை
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இலங்கை இந்தியப் பிரதமர்கள் டில்லியில் சந்திப்பு பற்றிய செய்தி, இனப்பிரச்சினை மற்றும் மீனவர் பிரச்சனை பற்றி விவாதித்த்து குறித்து இந்தியப் பிரதமர் வெளியிட்ட கருத்து
மீனவர் பிரச்சனையில் இரு தரப்புக்களும் தொடர்ந்து பேசி தீர்வு காணவேண்டும் என்று அரசு கூறியிருப்பது குறித்து மீனவர் சங்கப்பிரதி இளங்கோ கருத்து
நேற்று ஜெனிவாவில் இலங்கை அமைச்சர் மங்கள சமரவீர இலங்கை அரசு இனப்பிரச்ச்னையில் தீர்வு காண உத்தேசித்துள்ள நடவடிக்கைகள் பற்றி தெரிவித்த கருத்துக்கள் குறித்த தமிழ்த் தரப்புக் கருத்துக்கள்
நாளை ஜெனிவாவில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் வெளியாகவுள்ள இலங்கை குறித்த விசாரணை அறிக்கையில், ராணுவத்தினர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டால், ராணுவத்தின் சார்பாக தனிநபர் மசோதா ஒன்று சமர்பிக்க உள்ளதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருப்பது பற்றிய செய்தி
ஆகியவையும்
பின்னர் அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியும் கேட்கலாம்
