“மக்காவில் மரணித்தவர்கள் வீரமரணமடைந்தவர்கள் என்னும் நிலையை அடைகிறார்கள்”
Share
Subscribe
ஹஜ் புனிதப்பயணம் சென்று மக்காவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி எழுநூறுக்கும் அதிகமானோர் உயிரிழந்த மோசமான விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் மரணமடைந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த மூவரின் சடலங்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படாது என்று தெரிவித்த மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், மக்காவில் மரணித்தவர்கள் வீரமரணமடைந்தவர்கள் என்னும் நிலையை அடைகிறார்கள் என்பதால் அவர்களின் சடலங்களை சொந்த ஊருக்கு கொண்டுவருவதற்கு அவர்களின் குடும்பத்தவரும் விரும்ப மாட்டார்கள் என்றும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
சவூதி அரேபிய அரசாங்கம் ஹாஜிகளின் பாதுகாப்பு தொடர்பில் உரிய கவனம் செலுத்தவில்லை என்கிற இரானின் விமர்சனம் அரசியல் காரணங்களால் கூறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மக்காவில் நடந்த விபத்து குறித்தும், அது தொடர்பான விமர்சனங்கள் குறித்தும் ஜவாஹிருல்லாஹ் பிபிசி தமிழோசைக்கு அளித்த விரிவான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
