அக்டோபர் -1, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (01-10-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கையின் போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான நீதி விசாரணை கோரி ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்த செய்திகள்;
அதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனின் கருத்துக்கள்;
இன்றைய ஐநா தீர்மானம் போதுமானதல்ல என்று கூறும் பிளாட் அமைப்பின் தலைவர் டி சித்தார்த்தனின் கருத்துக்கள்;
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் ஒரு பெண்ணை தொடர்புபடுத்தி தவறான தகவலொன்றை பிரசுரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட தென் மாகாண சபையின் பிரதித் தலைவர் சம்பத் அத்துகொரலவை வரும் ஐந்தாம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்த செய்தி;
கொடதேநியாவ பகுதியில் வசித்து வந்த சிறுமியின் கொலை தொடர்பாக கைது செய்யப் பட்டு விளக்க மறியலில் வைக்கப் பட்டிருந்த பாடசாலை மாணவன் உட்பட இரண்டுபேரை விடுதலை செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்த செய்தி;
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டார் என்கிற சந்தேகத்தின்பேரில் கொல்லப்பட்டவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து பிபிசி செய்தியாளர் தரும் விரிவான செய்தித்தொகுப்பு;
சிரியா மீதான ரஷ்யாவின் வான் தாக்குதல் குறித்த செய்தியை ஏற்கனவே செய்தியறிக்கையில் கேட்டீர்கள். ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கான பின்னணி குறித்த பிபிசியின் அலசல்;
உலக அளவில் தங்கம் உள்ளிட்ட மதிப்புமிக்க உலோகங்களின் விலையை நிர்ணயிப்பதில் ஏழு பெரிய வங்கிகள் முறைகேடு செய்ததாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அதுகுறித்த விசாரணைக்கு ஸ்விஸ் அரசு உத்தரவிட்டிருப்பது குறித்த செய்திகள் ஆகியவற்றைக் கேட்கலாம்.
