அக்டோபர்-2, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (02-10-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் உருவாகவிருக்கும் பொறிமுறை கூட்டு நீதிமன்றம் அல்ல என்று கூறும் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கருத்துக்கள்;
ஆனால் ஐநாவின் தீர்மானத்தில் கூட்டு நீதிமன்றம் என்கிற வார்த்தை இல்லாவிட்டாலும் செயல் அளவில் இது அப்படித்தான் இயங்க முடியும் என்று கூறும் இலங்கை வழக்கறிஞரும் தெற்காசிய சட்டக்கல்வி மையத்தின் இணை-நிறுவனருமான Niran Anketell இன் செவ்வி;
இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக சர்வதேச ஆதரவு அதிகரித்திருப்பதற்கு வன்முறை முடிவுக்கு வந்ததுதான் முக்கிய காரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் பெயரில் வடக்கில் நடத்தப்படுகின்ற 'முரளி கோப்பை'-உள்ளூர் கிரிக்கெட் சுற்றுப்போட்டி இந்த ஆண்டும் வரும் 7 ஆம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடக்கவிருக்கும் நிலையில் வடக்கு- கிழக்கு இளைஞர்களை நாட்டின் ஏனைய பகுதி இளைஞர்களுடன் இணைப்பதற்காக கிரிக்கெட் விளையாட்டை பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் நடத்தப்படும் இந்த போட்டிகள் வட-கிழக்கு இளைஞர்களின் மொழிப் பிரச்சனையை எப்படி கையாளப்போகிறது என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முத்தையா முரளிதரன் அளித்த பதில்;
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நியமனங்களை இரத்துச் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் தள்ளிப் போட்டிருப்பது குறித்த செய்தி;
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் தாத்ரி பகுதியில் வீட்டில் மாட்டு மாமிசத்தை வைத்திருந்ததாகக் கூறப்பட்டு இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கும் பிரதேசத்தில் இரண்டு உள்ளூர் இந்து அமைப்புகள் வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்திவருவதாக குற்றம்சாட்டப் படுவது குறித்த செய்தி;
இந்தியாவிலிருந்து வெளியாகும் புவிவெப்பமாக்கும் வாயுக்களின் அளவை 2030ஆம் ஆண்டுக்குள் 35 சதவீதம் அளவுக்கு குறைக்கப்போவதாக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா உறுதியளித்துள்ளது குறித்த செய்தி;
இதை இந்திய சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
