'பாரதப் பிரதமரை பரிபூரணமாக நம்புகின்றோம்': சம்பந்தன்
Share
Subscribe
இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் காலத்தில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவரை பரிபூரணமாக நம்புவதாகவும் நரேந்திர மோடியை இலங்கையில் சந்தித்தபோது தாம் கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
உலகில் செல்வாக்கு மிக்க, அண்டை நாடான இந்தியாவின் உதவி ஒத்தாசைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தமிழ் மக்கள் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் உரையாற்றியபோது வலியுறுத்தியிருக்கின்றார்.
