அக்டோபர் 4, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 04, 2015, 04:42 PM

Subscribe

இன்றைய (04-10-2015) பிபிசி தமிழோசையில்

இந்தியாவில் கருப்புப்பணத்தை அரசாங்கத்திடம் தெரிவிப்பதற்கான மத்திய அரசின் திட்டம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் அதில் எதிர்பார்த்த அளவு கருப்புப்பணம் வெளிவரவில்லை என்பதற்கு என்ன காரணம் என்பது குறித்த ஆய்வு;

தென்னிந்திய தமிழ் திரைப்படங்கள் காரணமாகவே இலங்கையில் தமிழ் சிறார்கள் மத்தியில் புகைத்தல் பழக்கம் அதிகளவில் தூண்டப்படுவதாக இலங்கையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு குற்றம் சுமத்தியிருப்பதன் பின்னணி குறித்த செவ்வி;

இலங்கை கிழக்கு மாகாணசபைக்கு முன் வேலையற்ற தமிழ் பட்டதாரிகளின் தொடர் உண்ணாவிரத போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்ந்தது குறித்த செய்தி;

நிறைவாக மறைந்து வரும் மங்கல இசை சிறப்புத்தொடரின் நான்காவது பகுதி ஆகியவற்றை கேட்கலாம்.