மறைந்து வரும் மங்கல இசை: பகுதி 4

Oct 04, 2015, 05:06 PM

Subscribe

மங்கல இசை ஆலயங்களுடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தாலும், ஆலயத்தின் உள்ளே வாசிக்கப்படுவதைவிட வெளியேயே அதிகமாக வாசிக்கப்படுகிறது.

ஆலயங்களை ஒட்டி பெருமளவில் வளர்ந்த மங்கல இசையை கோவிலின் உற்சவ காலங்களில் வாசிப்பதற்கு என சில முறைகள் வகுக்கப்பட்டிருந்தன. இன்று மிகக் குறைவான ஆலயங்களிலேயே இந்த மரபு பின்பற்றப்படுகிறது.

நாகஸ்வரம் மற்றும் தவில் என்பது வெகுஜன மக்களுக்கான ஒரு வாத்தியமாகவே நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. மங்கல இசைப் பாரம்பரியம் என்பது மிகவும் புனிதமானதாகவும் கருதப்படுகிறது.

நாகஸ்வரம் மற்றும் தவில் இசைக்கென தனியான இலக்கணங்களும் வாசிப்பு முறைகளும் உள்ளன.

ரக்தி வாசிப்பு, மல்லாரி போன்றவை நாகஸ்வர இசைக்கு மட்டுமே உரியவை என தமிழிசை அறிஞர்கள் கூறுகிறார்கள்.

மங்கல இசையை பயிற்றுவிப்பதற்கும், பயிலுவதற்கும் மிகவும் பெரிய அளவிலான ஆர்வமும், பொறுமையும் தேவை என்பது வல்லுநர்களின் கருத்து.

மிகப்பெரிய பாரம்பரியமும், ஆதரவும் பெற்றிருந்த இந்த உன்னதக் கலையின் இன்றைய நிலை மிகவும் கவலையளிக்கக் கூடிய நிலையில் உள்ளது என பலக் கலைஞர்கள் வருந்துகின்றனர்.

மங்கல இசையின் வாசிப்பு குறித்து இசை அறிஞர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள் அகியோரின் கருத்துக்களை இந்தப் பகுதியில் கேட்கலாம்.

இந்தச் சிறப்புத் தொடரைத் தயாரித்து வழங்குபவர் சிவராமகிருஷ்ணன்.