அக்டோபர் 5, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (05-10-2015) பிபிசி தமிழோசையில்
நவ்று தீவில் ஆஸ்திரேலியாவின் தடுப்புமுகாமில் உள்ள தஞ்சக் கோரிக்கையாளர்கள் 600 பேரின் விண்ணப்பங்களையும் ஒருவாரத்துக்குள் விசாரிக்க இருப்பதாக நவ்று அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையில் அங்கிருக்கும் இலங்கைத் தமிழரின் நிலை குறித்த ஒரு செவ்வி;
இலங்கையில் விவசாயம் செய்யாமல் வைக்கப்பட்டிருக்கும் காணிகளை அரசாங்கமே கைப்பற்றி விவசாயத்தை ஊக்குவிக்கப்போவதாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்திருப்பது குறித்த செய்தி;
இலங்கையில் விவசாயம் செய்யாமல் வைக்கப்பட்டிருக்கும் விவசாயக் காணிகளை அரசாங்கமே கைப்பற்றி அதில் விவசாயத்தை ஊக்குவிக்கப் போவதாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அறிவித்திருப்பது குறித்த செய்தி;
கடந்த 2010ல் காணாமல் போன இலங்கை ஊடகவியலாளர், பிரகித் எக்னளிகொடாவை தடுத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் கிரித்தலை ராணுவ முகாம் குறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது குறித்த செய்தி;
கொடதேநியாவ பகுதியைச் சேர்ந்த சிறுமியை தானே கொன்றதாக இந்த கொலை வழக்கில் தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரின் மூத்த சகோதரன் ஒப்புக்கொண்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளது குறித்த செய்தி;
இந்திய ஆளுகைக்குட்பட்ட கஷ்மீரில் இருக்கும் முக்கிய முஸ்லீம் மதத்தலைவர்களும் அமைப்புக்களும் ஸ்ரீநகரில் அஹ்மதியா பிரிவினர் அக்டோபர் 10 ஆம் தேதி நடத்தவிருக்கும் மாநாட்டை தடுத்து நிறுத்தும்படி கோரிக்கை விடுத்திருப்பது ஏன் என்பதை அலசும் ஆய்வுக்கண்ணோட்டம்;
நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
