அக்டோபர் 6, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (06-10-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச கலப்பு நீதின்றம் அமைப்பது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமளி குறித்த செய்திகள், இலங்கையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய உதவியுடன் வீடுகள் கட்டப்படுமென வந்திருக்கும் தகவல் குறித்த செய்தி, இலங்கையில் மஹிந்த ஆட்சியின்போது, அந்த ஆட்சிக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டியவர்களை கைதுசெய்ததற்கு காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பது குறித்த செய்தி, தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளின் பேட்டிகளை ஊடகங்கள் ஒளிபரப்புவது சரியா என்பது குறித்து ஒரு செவ்வி, புதிய அறிவியல் செய்திகளை அளிக்கும் அனைவருக்கும் அறிவியல் உள்ளிட்டவை இன்றைய தமிழோசையில் இடம்பெற்றுள்ளன.
