அக்டோபர் 9, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (09-10-2015) பிபிசி தமிழோசையில்
சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக வேலைசெய்து கொண்டிருந்த தமிழகப்பெண் ஒருவரின் கையை அவரை வேலைக்கு அமர்த்தியிருந்தவர் வெட்டிவிட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து அவரது குடும்பத்தின் கருத்து;
இந்திய சமூக வலைத்தளங்களை உலுக்கியெடுத்த உத்தரப்பிரதேச தலித் குடும்ப ஆடை களைவு சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்த செய்தி;
உலகில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படும் சூழ்நிலைகள் உள்ள நாடுகளின் வரிசையில் இலங்கையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் அறிக்கை கூறியிருப்பது குறித்து ஒரு செவ்வி;
ஊடகவியலாளர் பிரகீத் எக்னளிகொட காணாமல்போனது தொடர்பான வழக்கின் விசாரணைகளை சீர்குலைப்பதற்கு ராஜபக்ஷ குடும்பத்தினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவரது மனைவி சந்தியா எக்னளிகொட குற்றம்சாட்டியுள்ளது குறித்த செய்தி;
கொழும்பு நகருக்குள் தடையின்றி கள்ளுக்கடைகளை ஆரம்பிப்பதற்கு கொழும்பு பிரதேச செயலாளர் வழங்கியுள்ள அனுமதியை ரத்துசெய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்த செய்தி;
இலங்கையின் கிளிநொச்சி விஸ்வமடு கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் இலங்கை இராணுவத்தினர் நால்வரை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடுமையாக தண்டித்திருப்பதை பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு வரவேற்றிருப்பதோடு, இதுபோன்ற பாலியல் வல்லுறவு வழக்குகள் தொடர்பாக சில கோரிக்கைகளையும் முன்வைத்திருப்பது குறித்த செய்தி;
ஜெர்மனிக்குள் லட்சக்கணக்கான அகதிகளின் வருகையால் அங்கு தீவிர வலதுசாரி இயக்கங்களின் செல்வாக்கு அதிகரிக்கிறதா என்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம் ஆகியவற்றைக் கேட்கலாம்.