அக்டோபர் 10, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 10, 2015, 06:18 PM

Subscribe

இன்றைய (10-10-2015) பிபிசி தமிழோசையில்

இலங்கையின் தலைநகரில் இந்துக் கோயில் ஒன்றின் திருவிழாவுக்கு சில முஸ்லிம்கள் தடை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த காலங்களில் கடும்போக்கு மதவாதிகளால் ஏற்பட்ட வன்முறைகளையும் முரண்பாடுகளையும் புதிய அரசாங்கத்தாலும் தடுத்து நிறுத்தமுடியாதுள்ளதா என்ற கேள்விக்கு நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசனின் பேட்டி;

திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்தின் ஒரு பகுதியாக இந்திய உதவி வீடுகளை பெறுவதற்கு தெரிவான குடும்பங்களில் 59 சதவீத குடும்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி;

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் காவல்துறையால் ஒரு தலித் குடும்பம் அடித்து ஆடைகளையப்பட்டதான புகாரில், அந்த தலித் குடும்ப உறுப்பினர்கள் காவல்துறையில் தமது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி அவர்களாகவே ஆடைகளை களைந்துகொண்டார்கள் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட கூற்றில் உண்மையில்லை என்று கூறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் ஏ கே பத்மநாபனின் பேட்டி;

உத்தரப்பிரதேசத்தில் தாத்ரி என்னும் இடத்தில் முஸ்லீம் ஒருவர் மாட்டுக்கறியை தனது வீட்டின் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தார் என்கிற புகாரில் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் காவல்துறையால் ஒரு தலித் குடும்பம் அடித்து ஆடைகளையப்பட்டதாக புகார் எழுந்துள்ள சம்பவம் ஆகிய இரு சம்பவங்கள் அடுத்தடுத்து இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பில் இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்து அந்த ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி டி முருகேசனின் செவ்வி;

செர்பியாவில் தங்கத் தயாரிப்பில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த நிறுவனம் ஒன்று, அதன் ஊழியர்களுக்கு தான் செலுத்த வேண்டியிருந்த 5 மாத நிலுவைச் சம்பளத்தை, தனித்துவமான வழிமுறை ஒன்றைக் கையாண்டு, தங்கமாகக் கொடுத்து தீர்த்துள்ளது குறித்த செய்திக்குறிப்பு;

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றைக் கேட்கலாம்.