அக்டோபர் 12, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (12-10-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கைச் சிறைகளில் இன்று திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கைதிகள் தொடர்பில் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதியுள்ளது குறித்த செய்தி;
இதுகுறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் செவ்வி;
இலங்கையின் வடக்கே நிறைவேற்றப்பட்டு வரும் இந்திய வீடமைப்பு திட்டத்தில் தொடர்புடைய ஒரு உள்ளூர் அதிகாரி பாலியல் லஞ்சம் கோரியதாக எழுந்துள்ள புகார் குறித்த செய்திகள்;
இலங்கையில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்கின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளது குறித்து இன்று அந்த கட்சி சார்பில் அளிக்கப்பட்டிருக்கும் விளக்கங்கள் குறித்த செய்தி;
இலங்கையில் சிறார்கள் மத்தியில் சுத்தம் மற்றும் சுகாதாரப் பழக்க வழக்கங்களை ஊக்குவிக்கும் யுனிசெப் அமைப்பின் வேலைத்திட்டத்திற்காக இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் இலங்கை சென்றுள்ளது தொடர்பான தகவல்கள்;
விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.