அக்டோபர் 13, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 13, 2015, 04:52 PM

Subscribe

இன்றைய (13-10-2015) பிபிசி தமிழோசையில்

இலங்கை சிறைச்சாலைகளில் இருந்து விடுதலை கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வடமாகாண சபை உறுப்பினர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பது குறித்த செய்தி;

இலங்கை கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் தங்களுக்கு பணி நியமனம் வழங்குமாறு கோரி 14வது நாளாக நடத்திவரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் குறித்த செய்தி;

இந்தியாவில் வகுப்புவாத அரசியலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எழுத்தாளர்கள் சாஹித்ய அகாதெமி விருதுகளைத் திருப்பி அளித்துவரும் நிலையில், தமிழ் எழுத்தாளர்களின் நிலைப்பாடு குறித்து ஒரு செவ்வி;

புதிய அறிவியல் செய்திகளை தொகுத்துத் தரும் அனைவருக்கும் அறிவியல் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.