'தந்தை செல்வாவின் சத்தியாகிரகப் போராட்டத்தின் குழந்தை டேவிட் ஐயா'

Oct 15, 2015, 01:56 PM

Subscribe

1956-ம் ஆண்டில் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் முன்னெடுத்த சத்தியாகிரகப் போராட்டத்தின் குழந்தை என்று மறைந்த எஸ்.ஏ. டேவிட் அவர்களை இலங்கை சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான மு. நித்தியானந்தன் வர்ணித்துள்ளார்.

டேவிட் ஐயா என்று அழைக்கப்படும் எஸ்.ஏ. டேவிட் கடந்த 11-ம் திகதி கிளிநொச்சியில் காலமானார்.

இறக்கும்போது அவருக்கு வயது 91.

1983-ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் வாழ்ந்துவந்த எஸ்.ஏ. டேவிட் கடந்த ஜூன் மாதம் இலங்கையின் வடக்கே உள்ள கிளிநொச்சிக்கு சென்று வாழ்ந்துவந்தார்.