இன்றைய (அக்டோபர் 15) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
பத்தாண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானுக்குள் தவறிச்சென்று காணாமல் போன, செவிப்புலன் மற்றும் பேசும் திறனற்ற இந்தியப் பெண் ஒருவர் தனது பெற்றோரை அடையாளம் கண்டு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி அனுப்ப்ப்படவிருப்பது பற்றிய செய்திக்குறிப்பு
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலின் போது அரசு நடத்தும் ஐ.டி.என் தொலைக்காட்சி மூலம் செய்த விளம்பரங்களுக்கு பணம் தராத விஷயம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக் கமிஷன் நீதிபதிகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த ஆட்சேபணைகளை அடுத்து ஆணைய விசாரணைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட்து பற்றிய செய்திக்குறிப்பு
இலங்கையில் தமிழ் சிறைக்கைதிகள் விவகாரம் குறித்து இலங்கை அரசு இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணும் என்று இலங்கை நீதியமைச்சர் கூறியிருப்பது பற்றிய செய்தி
இந்தியாவில் ஆதார் அட்டைகளை மக்கள் சுயவிருப்பத்தின் அடிப்படையில் மேலும் நான்கு திட்டங்களுக்கு விஸ்தரிக்க இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது பற்றிய குறிப்பு
இந்தியாவில் இணையம் மூலம் மருந்துகள் விற்பனையை அனுமதிக்க அரசின் முடிவு பற்றி மருந்து வணிகர்கள் சங்கப் பிரதிநிதி தெரிவிக்கும் கருத்துக்கள்
ஆகியவை இடம்பெறுகின்றன