அக்டோபர் 16, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (16-10-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கைச் சிறைகளில் இருக்கும் தமிழ்க்கைதிகள் தம்மை விடுவிக்கக்கோரி தொடர்போராட்டம் நடத்திவரும் பின்னணியில் இவர்களில் பெரும்பான்மையானவர்களை நவம்பர் மாதம் 7 ஆம் தேதிக்குள் விடுவிக்க அரசு ஒப்புக்கொண்டிருப்பதாகக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தரின் பிரத்யேகச் செவ்வி;
இலங்கையில் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அதிகாரங்கள் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்வைத்த ஆட்சேபணைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி;
இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 125 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றார்கள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் சுங்கத்துறையின் மூன்று உயர் அதிகாரிகளை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறித்த செய்தி;
இந்திய நாடாளுமன்றம் ஏகமனதாக உருவாக்கிய தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் சட்டவிரோதமானது என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குறித்த செய்தி;
இந்திய உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு மிக மோசமான தீர்ப்பு என்று சாடும் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே சந்துருவின் ஆய்வுக்கண்ணோட்டம்;
இந்திய முஸ்லிம்கள் இந்தியாவில் தொடர்ந்து இருக்க வேண்டுமானால் மாட்டுக்கறி சாப்பிடுவதை அவர்கள் கைவிடவேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்திருப்பது குறித்த செய்தி;
இந்தியாவில் முன்பு தடை செய்யப்பட்டிருந்த மேகி நூடுல்ஸ் குறித்து மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளில், மேகி நூடுல்ஸ் தரமானது தான் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக மேகி நூடுல்ஸை தயாரித்து விற்கும் நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.