நீதிபதிகள் நியமனம்: உச்சநீதிமன்றத் தீர்ப்பு “நமக்கு நாமே தீர்ப்பு”
Share
Subscribe
இந்தியாவில் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க தற்போதுள்ள நீதிபதிகள் குழு ( கொலேஜியம்) முறையை மாற்றி, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் ஒன்றை அமைக்க இந்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த சட்ட்த்தையும் , 99வது அரசியல் சட்டத்திருத்தத்தையும், செல்லாது என்று இந்திய உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்த்து. இந்த தீர்ப்பை விமர்சிக்கும், சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு, இது நீதிபதிகளின் “நமக்கு நாமே தீர்ப்பு” என்று வர்ணித்தார்.
உச்சநீதிமன்ற இதுவரை வழங்கிய தீர்ப்புகளிலேயே மிக மோசமான தீர்ப்பு இதுதான் என்று அவர் கூறினார்.
அரசியல் சட்ட்த்தில் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பது குறித்து தெளிவான வரையறை இல்லாத நிலையில், உச்சநீதிமன்றம் இதுவரை இது குறித்து மூன்று வெவ்வேறு , ஒன்றுக்கொன்று முரணான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது என்று சுட்டிக்காட்டினார் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு. இந்தக் கொலெஜியம் நடைமுறை நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் என்று கூறப்பட்ட்து ஆனால் இந்த முறை அமலுக்கு வந்த சுமார் 20 ஆண்டுகளில் கிருஷ்ண அய்யர் , சின்னப்ப ரெட்டி, பகவதி போன்ற திறமையான நீதிபதிகளை நியமிக்க முடியவில்லை என்று கூறினார். நீதித்துறையின் சுதந்திரத்துக்கு இந்த தீர்ப்பு பலத்தைக் கொடுக்கிறது என்ற கருத்தை மறுத்த சந்துரு, உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த அரசியல் கட்சிகள்தான் நீதிபதிகளை நியமிக்கின்றன. எனவே நீதிபதிகள் நியமனம் என்பது அரசியல் நடவடிக்கைதான். ஆனால் பதவிக்கு வந்தபிறகு அவர்கள் கட்சி சார்பில்லாமல் நடக்கவேண்டும் என்றார் சந்துரு.