அக்டோபர் 18,, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (18-10-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்திய வீடமைப்பு திட்ட பயனாளியான பெண் ஒருவரிடம் இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரி பாலியல் சலுகை கோரியதாகக் கூறப்படும் புகார்கள் மீதான விசாரணைகள் நிறைவுற்றிருப்பது தொடர்பான செய்திகள்;
விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி புற்றுநோயால் இன்று காலமானது குறித்த செய்தி;
தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் துவரம்பருப்பு உள்ளிட்ட சில பருப்புகளின் விலை கடந்த ஒரு மாதத்தில் பல மடங்கு உயர்ந்திருப்பது அரசியலில் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருப்பது குறித்த செய்தி;
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் இன்று சென்னையில் உள்ள செயிண்ட் அப்பாஸ் பள்ளிக்கூடத்தில் நடைபெற்று முடிந்துள்ளது குறித்த செய்தி;
இன்று நடந்துமுடிந்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் குறித்த செய்திகளை தமிழ்நாட்டின் செய்தித் தொலைக்காட்சி சேனல்கள் கடந்த பலநாட்களாக விரிவாக அலசியதுடன் இன்று ஒட்டுமொத்த தேர்தலையும் நாள் முழுக்க நேரலையாக ஒளிபரப்பிய விதம் சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்துக்குள்ளாகி வரும் பின்னணியில் இந்த தேர்தலை தமிழக செய்தித் தொலைக்காட்சிகள் கையாண்ட விதம் சரியா என்பது குறித்து எழுத்தாளரும் விமர்சகருமான மனுஷ்யபுத்திரனின் செவ்வி;
நிறைவாக மறைந்துவரும் மங்கல இசை சிறப்புத் தொடரின் ஐந்தாம் பகுதி ஆகியவற்றைக் கேட்கலாம்.