அக்டோபர் 24, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (24-10-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கைக்கு சென்றுள்ள ஐநாவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவினரின் சந்திப்புகள் குறித்து அமைச்சர் மனோ கணேசனின் செவ்வி
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இந்து ஆலயங்கள் இரண்டு தாக்கப்பட்டதாகவும் அந்த கோவிலின் வழிபாட்டு விக்கிரகங்கள் வெளியில் வீசப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்திருப்பது குறித்த செய்தி;
இலங்கையில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான கூட்டொப்பந்தம் காலாவதியாகி 7 மாதங்கள் கடந்துள்ள பின்னணியில் அதிகரித்துவரும் தேயிலை உற்பத்திச் செலவை சமாளிப்பதற்காக, தொழிலாளர்களுக்கே தேயிலைக் காணிகளை குத்தகைக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று சில நிறுவனங்கள் தொழிற்சங்கங்களிடம் முன்வைத்துள்ள யோசனைகள் குறித்து கண்டியிலிருந்து இயங்கும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் இயக்குநர் முத்துலிங்கத்தின் செவ்வி
இலங்கைச் சிறைகளில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுதலைசெய்ய வேண்டுமெனக் கோரி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளது குறித்த செய்தி;
ஆப்கானிஸ்தானில் மஸார் இ ஷரீப் என்ற இடத்திலிருந்து காபுலில் உள்ள பல்கலைகழகத்திற்கு பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர் தனது எட்டு மணி நேர பயணத்தின் போது தாலிபான் ஆயுததாரி ஒருவரால் வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட சம்பவத்தையும் அப்போது தாலிபன் போராளிகள் வெளியிட்ட கருத்துக்களையும் இரகசியமாக தனது திறன்பேசியில் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருப்பது குறித்த செய்தி;
நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றைக் கேட்கலாம்.