அக்டோபர் 26, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (26-10-2015) பிபிசி தமிழோசையில்
ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட மிகமோசமான நிலநடுக்கத்தில் குறைந்தது 150க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக வந்திருக்கும் தகவல்கள்;
பாகிஸ்தான் எல்லை தாண்டிச்சென்ற பெண் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியா திரும்பியுள்ள நிலையில் அவரது குடும்பத்தை அடையாளம் காண்பதில் தொடரும் குழப்பம் குறித்த தகவல்கள்;
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதாக தமிழ்நாட்டின் ஆளும் அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் டில்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து புகார் அளித்திருப்பது குறித்த செய்தி;
தமிழ்நாட்டின் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக லண்டனைச் சேர்ந்தவர் ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிறார் பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் ஆண்களுக்கு தண்டனையாக அவர்களின் ஆண்மை நீக்கம் செய்யப்படவேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பதன் சரி தவறுகள் குறித்து பியுசிஎல் என்கிற மனித உரிமை பாதுகாப்பு அமைப்பின் வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்தின் செவ்வி;
இலங்கைச் சிறைகளில் நீண்டகாலமாக வழக்குகள் முடிக்கப்படாமல் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற தமிழ்க் கைதிகளுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிணை வழங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது குறித்து தேசிய கலந்துரையாடல்கள் தொடர்பான அமைச்சர் மனோ கணேசனின் செவ்வி;
இலங்கையில் பாலியல் தொழிலுக்கு அங்கீகாரம் அளிக்கவேண்டும் என்றும் பாலியல் தொழிலாளர்களின் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் கொழும்பில் இருக்கும் பாலியல் தொழிலாளர்கள் ஒரு சங்கம் அமைத்து கோரிக்கை விடுத்திருப்பது குறித்து அந்த சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் ஒரு பெண் பாலியல் தொழிலாளியின் பிரத்யேக செவ்வி;
இலங்கையில் பாலியல் தொழிலுக்கு அங்கீகாரம் அளிக்கவேண்டும் என்றும் பாலியல் தொழிலாளர்களின் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் பாலியல் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருப்பது குறித்து பாலியல் தொழிலாளியின் செவ்வி;
நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.