"ஆண்களைத் தேடி நாங்கள் செல்வதில்லை; ஆண்கள் தான் எங்களைத் தேடி வருகிறார்கள்"
Share
Subscribe
இலங்கையில் பாலியல் தொழிலுக்கு அங்கீகாரம் அளிக்கவேண்டும் என்றும் பாலியல் தொழிலாளர்களின் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் கொழும்பில் இருக்கும் பாலியல் தொழிலாளர்கள் ஒரு சங்கம் அமைத்து கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
இந்த கோரிக்கை குறித்து அந்த சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் ஒரு பெண் பாலியல் தொழிலாளி பிபிசி தமிழோசைக்கு செவ்வியளித்தார்.
ஆண்களைத் தேடி தாங்கள் செல்வதில்லை என்றும், ஆண்களே தம்மைத் தேடி வருகிறார்கள் என்றும் கூறிய அவர், தம்மைப்போன்ற பாலியல் தொழிலாளிகளுக்கு அரசாங்கம் உரிய அங்கீகாரம் அளித்து செயற்பட அனுமதித்தால் அதன் மூலம் மற்ற பெண்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று அவர் வாதாடினார்.
அவரது கோரிக்கையின் பேரில் அவரது பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவரது செவ்வியின் ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.