அக்டோபர் 31, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 31, 2015, 08:15 PM

Subscribe

இன்றைய (31-10-2015) பிபிசி தமிழோசையில்

224 பேருடன் பயணித்த ரஷ்யப் பயணிகள் விமானம் எகிப்தில் விபத்துக்குள்ளானதில் எவரும் உயிர் தப்பவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையில் கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் குறித்த செய்தி;

இலங்கையின் சிறைகளில் இருக்கும் கைதிகள் மீதான விசாரணைகள் ஆண்டுக்கணக்கில் நீடிப்பதாகவும் அவற்றை விரைந்து முடிக்கவேண்டும் என்றும் அமைச்சர் கோரியிருப்பது குறித்த செய்தி;

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மத்திய அரசின் பாதுகாப்புப்படையினர் பாதுகாப்பளிக்கவேண்டும் என்றும் அதற்காக தமிழக அரசு பதினாறரை கோடி நிதியளிக்கவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணியை விளக்கும் செவ்வி;

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றைக் கேட்கலாம்.