மறைந்து வரும் மங்கல இசை:சிறப்புத் தொடரின் எட்டாம் பகுதி
Share
Subscribe
நாகஸ்வரக் கலைஞர்களின் திறமையை உலகறியச் செய்வது அவர்களின் உதட்டோடு ஒட்டி உறவாடும் நாணலிலிருந்து செய்யப்படும் சீவாளி. நாகஸ்வரம் எனும் உடலுக்கு சீவாளி என்பதே உயிர் மற்றும் மூளை என இசை அறிஞர்களும், கலைஞர்களும் கூறுகிறார்கள். காவிரிக்கரையின் ஓரத்தில் இயற்கையாக விளையும் கொருக்காத்தட்டை எனும் நாணலில் இருந்தே சீவாளி தயாரிக்கப்படுகிறது. சீவாளித் தயாரிப்பு மிகவும் சிக்கலானதும் நளினமானதும் என்கிறார்கள் அதன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள். மிகவும் நளினமாகச் செய்யப்படும் இந்தச் சீவாளியை தற்போது தஞ்சை மாவட்டத்தில் மிகக் குறைந்தவர்களே செய்து வருகின்றனர். நாகஸ்வர வித்வான்களின் நாபியிலிருந்து வரும் காற்றானது இந்தச் சீவாளியின் வழியே பயணித்து, ஆச்சா மரத்தில் செய்யப்பட்ட நாகஸ்வரத்தின் உடல் பகுதியிலுள்ள துவாரங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு பின்னர் சுகமான இசையாக வெளியே வந்து காற்றோடு கலக்கிறது. எந்தவொரு நாகஸ்வரக் கலைஞருக்கும் சீவாளி என்பது சில நாட்கள் வாசித்து, அவரது உமிழ்நீரில் ஊறி பதமான பிறகே ஸ்ருதிக்கு ஏற்றவகையில் முழுமையாக வசப்படும் என மூத்த நாகஸ்வரக் கலைஞர்கள் கூறுகிறார்கள். சீவாளி தயாரிப்பில் உள்ள நளினங்கள், அதன் சிறப்பம்சங்கள் ஆகியவை குறித்து சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கும் இத்தொடரின் இப்பகுதியில் கேட்கலாம்.
