ஐ நா அதிகாரிகளை சந்தித்த, காணாமல் போனோரைத் தேடி அறியும் குழுவினர் பேசியது என்ன?
Share
Subscribe
வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐ நா வல்லுநர்கள் குழு இலங்கை சென்றுள்ளது. அரசின் அழைப்பில் அங்கு சென்றுள்ள அந்தக் குழு எதிர்வரும் 18ஆம் தேதி வரை நாட்டின் பல பகுதிகளுக்கு செல்லவுள்ளனர். இந்தக் குழுவினரை இன்று-திங்கட்கிழமை, இலங்கையில் காணாமல் போனோரைத் தேடி அறியும் குழுவினர் சந்தித்து பேசியுள்ளனர். ஐ நாவின் அந்த செயல்குழுவில் ஐந்து சுயாதீன உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆட்கள் கடத்தி காணாமல் செய்யப்படுவதை தடுக்கவும் அதை முற்றாக ஒழிக்கவும், இலங்கை என்னென்ன வழிகளைக் கையாண்டு வருகிறது என்பது குறித்து அவர்கள் ஆராயவுள்ளனர் என ஐ நாவின் செய்திக் குறிப்பு கூறுகிறது. பலவந்தமாக காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உண்மையக் கண்டறிவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் இழப்பீடுகள் கிடைப்பது ஆகியவற்றில் அரசு இதுவரை என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்தும் ஐ நா வல்லுநர்கள் குழு ஆராயும். ஐ நா வல்லுநர்கள் குழுவுடன் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து காணாமால் போனோரைத் தேடி அறியும் குழுவின் தலைவர் சுந்தரம் மகேந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த விஷயங்களை இங்கே கேட்கலாம்.
