இன்றைய (நவம்பர் 10) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்துவரும் அரசியல் சூழ்நிலை குறித்து வெளிநாடுகளில் வசிக்கும் வரலாற்றாளர்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய திறந்த மடல் பற்றிய செய்தி
இந்திய முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் என்ற கோரிக்கை சரிவர அமல்படுத்தப்படவில்லை என்று கூறி முன்னாள் ராணுவத்தினர் தங்களுக்கு அளிக்கப்பட்ட பதக்கங்களைத் திரும்ப அனுப்பும் போராட்டத்தை தொடங்கியிருக்கும் நிலையில் இதை ஒரு முன்னாள் ராணுவத்தினர் சங்கம் கண்டிப்பது பற்றிய செய்தி
இலங்கையில்சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விரைவில் தொடங்கும் என்ற அறிவிப்பு பற்றிய செய்தி
இலங்கையில் தமிழ் சிறைக்கைதிகள் விடுதலையில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், கைதிகளின் குடும்பங்கள் இன்று கறுப்புத் தீபாவளி அனுசரிப்பது குறித்த செய்தி
(நேயர்களே இன்று செய்தி அரங்கம் நீண்டு அமைவதால், இன்று ஒலிபரப்பாக வேண்டிய அனைவர்க்கும் அறிவியல் நாளை புதன்கிழமை ஒலிபரப்பாகும் என்று தெரிவித்துக்கொள்கிறேம். )
