நவம்பர் 14 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
பாரிஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தாக்குதல்களுக்கு தாங்களே பொறுப்பு என ஐ எஸ் அமைப்பு கோரியுள்ள நிலையில், அவர்கள் மீது ஈவு இரக்கமற்ற எதிர்த்தாக்குதல் இருக்குமென அதிபர் ஒலாந் கூறியுள்ளவை தாக்குதல் நடைபெற்ற பாரிஸில் நிலை எப்படியுள்ளது என அங்கிருக்கும் செய்தியாளர் ராஜன் தரும் தகவல்கள் தாக்குதல்களுக்கு பிறகு பாரிஸ் நகரில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து உள்ளூர் கவுன்சிலர் கலையரசி தெரிவிக்கும் விவரங்கள் வட இலங்கையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள செய்திகள் காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் ஐ நா குழுவினர் மட்டக்களப்பில் தமது அமர்வை நடத்தியுள்ள தகவல்கள் ஆகியவையும் இன்னபிற செய்திகளும் கேட்கலாம் முதலாவதாக செய்தியறிக்கை
